Ttl

ஜோதிடர்
ஜோதிஷ் சிரோன்மணி
முருகானந்தம்
Astrologer
Jyothish Chironmani
Muruganantham

bg

Pages

dd

cnt

Share

நல்ல ஜோதிடரை எப்படி அடையாளம் காண்பது?

நல்ல ஜோதிடரை எப்படி அடையாளம் காண்பது?

"உள்ளூர் வைத்தியர் ,வெளியூர் ஜோதிடர்" என்பது பழமொழி. அதாவது மருத்துவர் நம்ம ஊர்க் காரராக இருக்கவேண்டும். அப்போதுதான், நம்முடைய குடும்பத்தில் யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை என எல்லாம் அவருக்குத் தெரியும். எளிதில் மருத்துவம் செய்வார்.

ஆனால் ஜோதிடர் வெளியூர்க் காரராக இருக்கவேண்டுமாம். உங்களைப்பற்றி அவருக்கு ஒரு கருத்து இருக்கும்பட்சத்தில்(mind block or perception) அவரால் எதையும் தெளிவாக சொல்ல முடியாது. உண்மைக் கருத்தை தன சொந்தக் கருத்து ஆளுமை செயதுவிடும்.

ஆனால் வெளியூர்க் காரராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நீங்கள் யார், ஏழையா பணக்காரரா, உங்கள் சமூக அந்தஸ்து என்ன என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறதோ அதையே சொல்வார்.

ஜோதிடரின் பலமே நடுநிலை தவறாமல் இருப்பதுதான்.ஒரு ஜோதிடர் பலன் சொல்லி அது அப்படியே நடக்கும்போது அது ஜோதிடத்தின் மகிமை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .அதை விடுத்து தான் சொல்வது எல்லாம் பலிக்கிறது என்ற எண்ணம் ஒரு ஜோதிடருக்கு வந்துவிட்டால், அவருக்கு ஜோதிடத்தின் மீது உள்ள ஞானம் குறைந்து தன் வாக்கு பலிதம் மீது அதீத நம்பிக்கை வந்துவிடுகிறது. தான் சரியாக கணக்கு பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் போய், தான் சொல்வது எல்லாம் நடக்கிறது என்ற கர்வம் வந்துவிடும். அந்த கர்வம் அவர் கண்ணை மறைத்துவிடும். விளைவு? ஜாதகத்தில் பார்க்கவேண்டிய சில அமைப்புகளை பார்க்கத்  தவறிவிடுவார். பின் அவர் வாக்கு பலிக்காது.


கடவுள், குருமார்கள், ஜோதிடர்கள் இவர்களெல்லாம் அனைவருக்கும் பொதுவானவர்கள். பணக்கார மாணவனுக்கு ஒரு மாதிரியும், ஏழை மாணவனுக்கு ஒரு மாதிரியும் பாடம் நடத்தும் ஆசிரியரை எங்காவது பார்க்கமுடியுமா ? 

ஆசிரியர் சில ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதுபோல ஜோதிடர்களும் சில நெறிகளைப் பின்பற்றவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

jscr