Ttl

ஜோதிடர்
ஜோதிஷ் சிரோன்மணி
முருகானந்தம்
Astrologer
Jyothish Chironmani
Muruganantham

bg

Pages

dd

cnt

Share

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்



கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்

ஒரு ஜாதகருக்கு கெடுதல் செய்யும் பாவங்கள் எல்லாம் கெட்டுவிட்டால் அதன் மூலம்  ஜாதகர் ராஜயோகத்தை அனுபவிப்பார்  என்பதே இதன் பொருள் .


ஜாதகர் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில் லக்னம் பலமாக இருக்கவேண்டும் . அதே நேரத்தில் அவர் அந்த நன்மைகளை எளிதில் அடைவாரா அல்லது போராடி பெறுவாரா என்பதை ஆறாம் பாவம் எட்டாம் பாவம் மற்றும் பனிரெண்டாம் பாவங்களே தீர்மானிக்கின்றன . 

ஜாதகரை நாம் ஹீரோ என எடுத்துக்கொள்வோம் . இந்த ஹீரோ பலம்கொண்டவராக இருந்தாலும் அவர் நன்மை பெறுவதை தடுக்கும் வில்லன்கள்தான் ஆறு , எட்டு , பனிரெண்டாம் பாவங்கள் . இந்த வில்லன்களுடைய பலம் அதிகமாக இருந்தால்  ஹீரோவுடைய வெற்றி போராட்டம் நிறைந்ததாக இருக்கும் . வில்லன்களுடைய பலம் குறைய குறைய ஹீரோவுடைய வெற்றி எளிதாக இருக்கும் . 

நம்முடைய ஆயுதத்தை நாம் தீர்மானிப்பதில்லை நம்முடைய எதிரிகள்தான் என்பார்கள் . அது உண்மைதான் ஆனால் அந்த எதிரியை தீர்மானிப்பதே கிரகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூத்திரதாரியான இயற்கைதான் . அந்த  இயற்கை எனும் டைரக்டர் வில்லன்களுக்கு கொடுத்திருக்கும்  ஆயுதம் பலம் குன்றி இருக்கும் பட்சத்தில் ஹீரோ அவர்களை திரைப்படத்தில் வருவதுபோல எளிதாக பந்தாடிவிட்டு வெளிநாட்டில் சென்று நாலு டூயட் பாடலும் பாடி சுபம் என படத்தை முடித்துவிடலாம் . வில்லன்களின் ஆயுதம் பலமாக இருக்கும் பட்சத்தில் ஹீரோவுக்கு  கடைசிவரை போராடவே நேரம் சரியாக இருக்கும் . வெளிநாடு சென்றாலும் டூயட் பாட முடியாது அங்கேயும் வில்லனுடன் சண்டையிடவே ஹீரோ செல்லவேண்டியிருக்கும் .

ஜோதிடரின் மனநிலை



ஜோதிடரின் மனநிலை 


சிலரை " ஏம்பா உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?" என்பார்கள்.இது  சில ஜோதிடருக்கும்  பொருந்தும்.

ஒரு குடும்பத்தலைவர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதோ பிரச்சனை வருகிறது. அதைத் தீர்க்கும் பொறுப்பு இந்த குடும்பத் தலைவருக்கு இருக்கிறது. அவர் முதலில் இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நிதானமாக யோசிக்கவேண்டுமா? அல்லது பிரச்சினைக்கு பயந்து மற்றவர்களிடம் கோபம் கொள்ள வேண்டுமா?

பெரும்பாலான ஜாதகத்தில் நல்லது, கெட்டது இரண்டுமே  இருக்கும். எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் பலன் சொல்லவேண்டுமே தவிர ஜாதகத்தின் ஒரு பகுதிமட்டும் நம் கண்ணில் தெரியக்கூடாது.

சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் கெட்டது மட்டுமே கண்ணில் படும். அதுவரை பரவாயில்லை. ஆனால் அந்த கெட்டதை  ஓவர்டேக் செய்யும் பல நல்ல அமைப்புகள் அந்த ஜாதகத்தில் இருக்கும். இவர்கள் கெட்டதை பார்த்துவிட்டதால் அடுத்த கட்டமே  போகமாட்டார்கள். நல்லது அவர்கள் கண்ணில் தெரியவே தெரியாது.  அவர்கள் விரும்புவதும் அதைத்தானே ! கெட்ட விஷயங்களை சொல்லி அது பலித்தால் எளிதில் புகழ் பெறலாம். ஏனெனில் நல்ல விஷயங்களை சொல்லி மனநிறைவோடு வாழ்வதைவிட கெட்டதை சொல்லி எளிதில் புகழ் பெறுவதே சிலரின் நோக்கமாக இருக்கிறது . நல்ல விஷயங்களின் தாக்கத்தைவிட கெட்டவிஷயங்களின் தாக்கம் உடனே மக்களை சென்றடைந்துவிடும் என்பதை சிலர்  நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் .

அவர்கள் வேண்டுமென்று செய்யாதவராய்  இருக்கலாம். மாறாக கெட்டதைப் பார்ப்பது அவர் குணமாகக் கூட இருக்கலாம். ஆனால், அத்தகைய மனிதரிடம் பாரபட்சமற்ற (unbiased) பலனை எப்படி எதிர்பார்க்க முடியும்?

குறையை பார்க்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் குறையை மட்டுமே பார்க்கும் பழக்கம் இருப்பது ஒரு மனநல குறைபாடே. அவர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்தாலும் அதில் என்ன குறை என்றுதான் பார்ப்பார்கள். ஒருவருடைய தசா புத்தி சரியில்லாத காலத்தில்  அவர்கள் இந்தமாதிரி ஜோதிடர்களிடம் மாட்டிக் கொள்வார்கள்.





நல்ல ஜோதிடரை எப்படி அடையாளம் காண்பது?

நல்ல ஜோதிடரை எப்படி அடையாளம் காண்பது?

"உள்ளூர் வைத்தியர் ,வெளியூர் ஜோதிடர்" என்பது பழமொழி. அதாவது மருத்துவர் நம்ம ஊர்க் காரராக இருக்கவேண்டும். அப்போதுதான், நம்முடைய குடும்பத்தில் யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை என எல்லாம் அவருக்குத் தெரியும். எளிதில் மருத்துவம் செய்வார்.

ஆனால் ஜோதிடர் வெளியூர்க் காரராக இருக்கவேண்டுமாம். உங்களைப்பற்றி அவருக்கு ஒரு கருத்து இருக்கும்பட்சத்தில்(mind block or perception) அவரால் எதையும் தெளிவாக சொல்ல முடியாது. உண்மைக் கருத்தை தன சொந்தக் கருத்து ஆளுமை செயதுவிடும்.

ஆனால் வெளியூர்க் காரராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நீங்கள் யார், ஏழையா பணக்காரரா, உங்கள் சமூக அந்தஸ்து என்ன என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறதோ அதையே சொல்வார்.

ஜோதிடரின் பலமே நடுநிலை தவறாமல் இருப்பதுதான்.ஒரு ஜோதிடர் பலன் சொல்லி அது அப்படியே நடக்கும்போது அது ஜோதிடத்தின் மகிமை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .அதை விடுத்து தான் சொல்வது எல்லாம் பலிக்கிறது என்ற எண்ணம் ஒரு ஜோதிடருக்கு வந்துவிட்டால், அவருக்கு ஜோதிடத்தின் மீது உள்ள ஞானம் குறைந்து தன் வாக்கு பலிதம் மீது அதீத நம்பிக்கை வந்துவிடுகிறது. தான் சரியாக கணக்கு பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் போய், தான் சொல்வது எல்லாம் நடக்கிறது என்ற கர்வம் வந்துவிடும். அந்த கர்வம் அவர் கண்ணை மறைத்துவிடும். விளைவு? ஜாதகத்தில் பார்க்கவேண்டிய சில அமைப்புகளை பார்க்கத்  தவறிவிடுவார். பின் அவர் வாக்கு பலிக்காது.


கடவுள், குருமார்கள், ஜோதிடர்கள் இவர்களெல்லாம் அனைவருக்கும் பொதுவானவர்கள். பணக்கார மாணவனுக்கு ஒரு மாதிரியும், ஏழை மாணவனுக்கு ஒரு மாதிரியும் பாடம் நடத்தும் ஆசிரியரை எங்காவது பார்க்கமுடியுமா ? 

ஆசிரியர் சில ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதுபோல ஜோதிடர்களும் சில நெறிகளைப் பின்பற்றவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

பொதுப்பலன்களும் ஜாதகப்பலன்களும்

பொதுப்பலன்களும் ஜாதகப்பலன்களும் 


 புத்தகங்கள்,டெலிவிஷன்,இணையதளம் வாயிலாக நாம் படிக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் ,சனி பெயர்ச்சி பலன்கள் ,ராகு,கேது பெயர்ச்சி பலன்களை படித்துவிட்டு அதில் சொன்னபடி நடக்கவில்லையே என்று சிலர் கேட்பதுண்டு.பொதுப்பலன்கள் என்பது அந்த ராசியில் உள்ள அனைவருக்குமான பொதுவான பலன்கள் ஆகும் .அது உங்கள் ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தின் பலன்கள் அல்ல . பொதுப்பலன்கள் ஓரளவு உங்களுக்கு பொருந்தினாலும் அதுவே உங்களுக்கான முழுமையான பலன்கள் என எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டுதான் உங்களுக்கான முழுமையான பலன்களை அறிந்துகொள்ளமுடியும் .

 ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தின் பலன்கள் சிறப்பாக இருந்து அவருடைய தசா புத்தியும் சாதகமாக இருக்கும் நேரத்தில் அவருடைய ராசிக்கு  பொதுப்பலன்களான குருபெயர்ச்சி பலன்கள் , சனி பெயர்ச்சி பலன்கள் , ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிறப்பாக இல்லையென்றாலும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லாமல் அவருடைய வாழ்க்கைப்பயணம் சிறப்பாக இருக்கும் .

 ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தின் பலன்கள் சிறப்பு இல்லாமல் அவருடைய தசா புத்தியும் சாதகமாக இல்லாத நேரத்தில் அவருடைய ராசிக்கு பொதுப்பலன்களான குருபெயர்ச்சி பலன்கள் , சனி பெயர்ச்சி பலன்கள் , ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிறப்பாக இருந்தாலும் அதனால் பெரிய நன்மை ஏதும் விளையாமல் அவருடைய வாழ்க்கைப்பயணம் சற்று சிரமத்திற்கு ஊடாகவே ஜாதகரை கொண்டுசெல்லும் .

ராகு காலம் ,எம கண்டம் மற்றும் குளிகை நேரங்கள்

ராகு காலம் , எமகண்டம் மற்றும் குளிகை நேரங்கள் 


நாள்           ராகு  காலம்     எம கண்டம்             


ஞாயிறு      4.30- 6 pm           12 - 1.30 pm                  


திங்கள்      7.30 - 9 am           10.30 - 12 pm                 


செவ்வாய்  3 - 4.30 pm          9 - 10.30 am                 


புதன்          12 - 1.30 pm          7.30 - 9 am                    


வியாழன் 1.30 - 3 pm             6 - 7.30 am                       


வெள்ளி     10.30 - 12 pm         3 - 4.30 pm                      



சனி             9 - 10.30 am          1.30 - 3 pm 



  ராகு காலம் மற்றும் எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்வதை  தவிர்க்க வேண்டும் .



                   

 நாள்                 குளிகை


ஞாயிறு           3 - 4.30 pm 


 திங்கள்           1.30 - 3 pm 


செவ்வாய்       12 - 1.30 pm 


புதன்                 10.30 - 12 pm    


வியாழன்         9 - 10.30 am 


வெள்ளி            7.30 - 9 am    


சனி                    6 - 7.30 am 

    
     

      குளிகை நேரத்தில் கண்டிப்பாக அசுப காரியங்களை தவிர்க்க வேண்டும் . குளிகை நேரத்தில் அசுப காரியங்களை செய்ய நேர்ந்தால் மீண்டும் மீண்டும் அசுப காரியங்கள் செய்ய நேரிடும் . ஆகவே  குளிகை நேரத்தில் அசுப காரியங்கள் செய்வதை தவிர்த்து மீண்டும் அதுபோல அசுப காரியங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் பார்த்துக்கொள்ளலாம் .

சுப நேரங்கள்

சுப நேரங்கள் 



ஞாயிறு    4 - 4.30 am , 7.30 - 10 am , 2 - 4.30 pm , 9 - 12 midnight 

திங்கள்    4.30 - 6 am , 6 - 7 am , 12 - 2 pm , 6 - 9 pm , 10 - 11 pm 

செவ்வாய்  5 - 6 am , 10.30 - 11 am , 12 - 1 pm , 4.30 - 6 pm , 7 - 8 pm , 10 - 12 midnight 

புதன்   5 - 6 am , 9 - 10 am , 1.30 - 3 pm , 4 - 5 pm , 7 - 10 pm , 11 - 12 midnight 

வியாழன்  2 - 3 am , 9 - 10.30 am , 1 - 1.30 pm , 4.30 - 6 pm , 6 - 7 pm , 8 - 9 pm 

வெள்ளி   6 - 9 am , 1 - 1.30 pm ,  5 - 6 pm , 8 - 9 pm , 10.30 - 11 pm 

சனி  4.30 - 6 am , 7 - 7.30 am , 10.30 - 12 pm , 12 - 1 pm , 5 - 6 pm , 6 - 7.30 pm , 9 - 10 pm 

நவகிரக பரிகார ஸ்தலங்கள்

நவகிரக பரிகார  ஸ்தலங்கள் 




சூரியன் - ஆடுதுறை 

சந்திரன் - திங்களூர்

செவ்வாய் - வைத்தீஸ்வரன்கோயில் 

புதன் - திருவெண்காடு 

குரு - ஆலங்குடி 

சுக்கிரன் - கஞ்சனூர் 

சனி - திருநள்ளாறு 

ராகு - திருநாகேஸ்வரம் 

கேது - கீழப்பெரும்பள்ளம்


நவகிரக  பரிகார ஸ்தலங்கள் அனைத்தும்  தமிழ்நாட்டில் கும்பகோணத்தை சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ளது . எனவே  நவகிரக பரிகார ஸ்தலங்கள் அனைத்திற்கும் நாம் செல்ல வேண்டுமெனில் முதலில் கும்பகோணம் சென்று தங்கி அங்கிருந்து ஒவ்வொரு ஸ்தலமாக சென்று வரலாம் .



என்னுரை

  என்னுரை               




என்னுடைய ஆலோசனைகளும் ஜோதிட பலன்களும் உங்களுக்கு ஏதெனும் ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்குமானால்   நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .

 உங்களுடைய கருத்துக்களை astromuruganonline@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளவும் .
                              
              நன்றியும் வணக்கமும் . 

குரு வணக்கம்

   குரு  வணக்கம்      



ஜோதிடம் எனும் கலையை எந்த ஒரு பொருளாதார நோக்கமும்  இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்  என்ற உயரிய நோக்கத்தோடு எங்களை போன்ற பல மாணவர்களை உருவாக்கிய  தன்னலமற்ற ஜோதிட ஆசிரியர் திரு.T.V.A .நாராயணன் அவர்கள் ஜோதிட ஆசிரியர் திரு.கௌரிசங்கர் அவர்கள் ஜோதிட ஆசிரியர் திரு.சதீஷ் அவர்கள் ஜோதிட ஆசிரியர் திரு.மனோகர் அவர்கள்.   இந்த ஆசிரியர்களே எங்களை போன்ற மாணவர்களை எந்த தயக்கமும் இல்லாமல் ஜோதிட கடலில் நீந்த கற்றுக்கொடுத்தவர்கள். இவர்களுக்கு  எனது நன்றியும் வணக்கமும் 


                                    
எங்களுடைய தயக்கத்தை போக்கி உற்சாகப்படுத்தி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு எங்களை கௌரவப்படுத்திய  உலகப்புகழ் பெற்ற ஜோதிட  வித்வான் திரு.காழியூர் நாராயணன் அவர்களுக்கு எனது  நன்றியும்  வணக்கமும் .



ஜோதிடத்தின் பல புதிய பரிமாணங்களை உலகிற்கு காட்டிய ஜோதிட நல்லாசிரியர் திரு . தேவராஜ்  அவர்களின் ஞானமும் எளிமையும் எங்களைப்போன்ற  மாணவர்களுக்கு எப்போதும் வியப்பையே ஏற்படுத்தும் . நல்லாசிரியர் அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும் .


இறை வணக்கம்







இறை வணக்கம் 



கணபதி மூல மந்திரம் 





ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 

க்லெளம் கங்கணபதயே 

வரவரத ஸ்ரவ ஜனம்மே 

வசமினய ஸ்வாஹா 




இறை வணக்கம் 







குரு பிரம்மா குரு விஷ்ணு 

குரு தேவோ மஹேஸ்வரஹ 

குரு சாஃஸாத் பரப்பிரம்மா 

தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ 



நவக்கிரக மந்திரம் 





ஓம் ஆதித்தியாய சோமாய மங்களாய புதாயஸ 

 குரு சுக்ர சனிப்யஷ்ய  ராகுவே கேதுவே நமஹ

jscr